தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டன.