தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஹிந்து அறநிலையத் துறை சார்பில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 28 தம்பதியினருக்கு சேலை, வேஷ்டிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திருக்கோவில் துணை ஆணையர் சுரேஷ், நகராட்சி தலைவி கவுசல்யா வெங்கடேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.