தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகரில் முருகன் என்பவரின் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் இன்று காலை 3 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு கிடந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் தாஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தாஸ், பாம்பை லாவகமாகப் பிடித்து புளியங்குடி காட்டுப்பகுதியில் விட்டார். அவரது செயலைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.