தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, சங்கரநாராயண சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குடம் இருளப்பசாமி கோவிலுக்கு வீதி உலா நடைபெற்றது. காலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.