தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அழகாபுரி மேற்கு காலனியில் குடிநீர் விநியோக குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் வழியாக விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் ராட்சத குழாயில் ஏற்பட்ட இந்த உடைப்பால், குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு, குழாயை சீரமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.