தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.