சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு இன்று மாலை பிரதோஷம் நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி