கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாடா பிள்ளையார் கோவில் முன்பு, தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி ஐ டி யு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சி ஏ டு யூ மாவட்ட தலைவர் வன்னிய பெருமாள், சிஐடியு மாவட்ட செயலாளர் மணிகண்டன், விசைத்தறி சம்மேளன தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்கரன்கோவில் விசைத்தறி சங்க தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் ரத்தினவேலு, பொருளாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் அசோக்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி