தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் மகேந்திரன். இவர் அவரது ஊரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது பட்டத்தூர் கண்மாய் பகுதியில் இருந்து மணல் ஏற்றிவந்த டிராக்டர் சங்கரன்கோவில் சென்றுகொண்டிருந்த நிலையில் முன்னே சென்ற டிராக்டர் வலதுபுறம் திடீரென திரும்பிய நிலையில் பின்னே இருசக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் எதிர்பாராதவிதமாக பின்பக்க சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானார்.
இந்தநிலையில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.