சங்கரன்கோவில் அருகே கார் மோதி ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நகரம் கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் மருதுபாண்டி(48) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி