சங்கரன்கோவில் அருகே புதிதாக கட்டிடங்கள் திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குவளைக்கன்னி பஞ்சாயத்தில், பஞ்சாயத்து தலைவர் தினேஷ் ஏற்பாட்டில், மாநில நிதிக் குழு மானிய நிதியிலிருந்து ரூ.27 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோகக் கடை, கலையரங்கம், சமுதாய சுகாதார வளாகம் உள்ளிட்ட கட்டிடங்களை டெல்லி சிறப்பு பிரதிநிதி எ.கே.எஸ். விஜயன், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் தலைமையில் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி