தென்காசி: குடும்ப தகராறில் மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்துமலையில், குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில், மருமகன் பாலசுப்பிரமணியன் தனது மாமியார் கருத்த துரைச்சியை வெட்டி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த மனைவி காளீஸ்வரிக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஊத்துமலை போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி