தென்காசி: காற்றுடன் மழையின் 1000 மேற்பட்ட வாழைகள் சரிந்து விழுந்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை திடீரென காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக கோமதிமுத்துபுரம் கிராமத்தில் விவசாயி ஞானராஜ் என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 4000 வாழைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕