தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ம் வகுப்பு பயிலும் 147-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி மதிய உணவும் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து தலைவி, திமுக கிளை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.