தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எலுமிச்சை மார்க்கெட்டில் பழங்களின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ எலுமிச்சை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. விலை வீழ்ச்சியால் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.