குடமுழுக்கு தேதியை மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும்-வானதி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில், பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்பாள் ஆகிய தெய்வங்களை வணங்கி தரிசனம் செய்தார். பின் செய்தியாளர் சந்திப்பின்போது
வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலின் திருப்பணிகளை முழுமையாக முடிக்காமல் கும்பாபிஷேகத்திற்கு தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதுவும் தேய்பிறை நாளில் வைத்திருப்பது மன வருத்தத்தை அளித்துள்ளதாகவும் இதனால் தமிழக அரசு வீண் பிடிவாதம் பிடிக்காமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி