மலேசியா சென்று வந்தா அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற கல்வி சாரா மன்ற செயல்பாடுகளில் மாநில அளவில் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று, மலேசியா கல்வி சுற்றுலா - 2026 செல்லவிருக்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சிவானிக்கு, தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவேணி, நகர் மன்ற தலைவி கௌசல்யா வெங்கடேஷ், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி