சங்கரன்கோவிலில் இலவச உடல் நல பரிசோதனை முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவிரி நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் உடல் நல பரிசோதனை முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இதில், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று உடல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டனர். குறிப்பாக, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி