அரசு பள்ளியில் வைத்து விலையில்லா மிதிவண்டி வழங்கினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 1200 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் தலைமையில் இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவி கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி