தென்காசி: கறிக்கடைக்காரர் வீட்டில் உள்ள வைக்கோல் படப்பில் திடீர் தீ

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பி. எஸ். நகரைச் சேர்ந்த பிரிட்டோ என்பவர் நடத்தி வரும் கறிக்கடைக்கு சொந்தமான காலி மனை இடத்தில் இருந்த வைக்கோல் படப்பு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி