தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் கேந்திப் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள், விளைந்த பூக்களுக்கு கட்டுப்படியாகாத விலை கிடைப்பதாகக் கூறி சுமார் 1000 கிலோ பூக்களை சாலையில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று கேந்திப் பூ கிலோ ரூ.10க்கு மட்டுமே விற்பனையானது. இந்த திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.