தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில், விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை வியாபாரிகள் எடை போடும்போது ஒரு கிலோவுக்கு 200 கிராம் வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறி, மின்னணு தராசு அமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூ மார்க்கெட் வளாகம் பரபரப்படைந்தது.