சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

சங்கரன்கோவில் அருகே பரமசிவம் (45) என்பவர் இன்று (நவம்பர் 16) காலை தனது விவசாய நிலத்தில் மல்லிகை செடிகளுக்கு மருந்து அடிக்க கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார். காலில் கயிறு சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். சின்னகோவிலான் குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமசிவனுக்கு வாய்பேச முடியாத மனைவியும் மகளும் மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி