குவளைக்கண்ணியில் நியாயவிலைக் கடை திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குவளைகண்ணியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 12.67 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, சின்னஒப்பனையாள்புரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் என மொத்தம் ரூ. 20.67 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி கட்டிடங்களை திறந்து வைத்தார். ராணி ஸ்ரீகுமார் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர் ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி