சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி கூலி வேலை செய்து வருகிறார். 2018ஆம் ஆண்டு, அதே ஊரைச் சேர்ந்த முருகன் (62) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.