தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நன்றி அறக்கட்டளை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டாக்டர்கள் வாழ விக்னேஷ், பூர்ணிமா, பால விக்னேஷ், ரவிச்சந்திர பிரகாஷ், ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பழனி செல்வம், இந்திய செஞ்சிலுவைச் சங்க செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தனர். சங்கரன்கோவில் தேரடி திடலில் இருந்து பேரணி தொடங்கியது. இசக்கி முத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.