திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ சீருடை அணிந்து 108 பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி