மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக சார்பில் மதிய உணவு வழங்கினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் ஏற்பாட்டில், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் 22 குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி