சங்கரன்கோவிலில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை இன்று திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராமுமோகன் தலைமையில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து காமராஜர் மற்றும் கக்கன் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், நகர காங்கிரஸ் தலைவர் உமாசங்கர், நகர பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி