தென்காசி: கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திராவாடி கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பச்சிளம் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர் அளித்த தகவலின் பேரில், அய்யாபுரம் போலீசார் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிறந்து சில தினங்களே ஆன, தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பெண் குழந்தையின் உடலை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி