சங்கரன்கோவில்: கார், ஷேர் ஆட்டோ விபத்து; ஒருவர் பலி

சங்கரன்கோவில் அருகே நாகராஜன் (45) என்பவர் நேற்று (ஜூன் 3) மதியம் ஷேர் ஆட்டோவில்  சண்முகநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பெண் காவலர் பிளஸ்சி உட்பட 7 பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் பிரபு ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி