சங்கரன்கோவிலில் திருக்கல்யாணம் காட்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 5 ஆம் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வில், தினமும் காலை மாலை இருவேளைகளிலும் கோமதி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று மாலையில் கிளி வாகனத்தில் கோமதி அம்பாள் எழுந்தருளி திருக்கல்யாண காட்சி கொடுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி