தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் வெஸ்டன் கார்ட்ஸ் அகாடமி சார்பில் நேற்று ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேசிய கொடி ஏந்தி 79 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனர். தொழிலதிபர் வைரசாமி, மருத்துவர் ராஜசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.