தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் விவசாயி சுப்பிரமணியன் வளர்த்து வந்த 80 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் கடித்ததில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, பாதிக்கப்பட்ட விவசாயியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ரூ.10,000 நிவாரண உதவியையும் வழங்கினார்.