தென்காசி: பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தைச் சேர்ந்த தற்காலிகப் பேராசிரியர் ராமசுப்பிரமணியன் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். மாடி வழியாக நுழைந்த அவர்கள், வீட்டின் கதவை உடைத்து சுமார் 12 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இரவில் வீடு திரும்பிய பேராசிரியர், பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி