தூத்துக்குடி: திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி, கீழ அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25), மீனவர். இவரது மனைவி அன்சியா (23). இந்த தம்பதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

ஒரு வாரத்திற்கு முன் குடும்ப பிரச்சனை காரணமாக அன்சியா கணவருடன் கோபித்துக் கொண்டு தாளமுத்துநகர், கோவில்பிள்ளை விளை தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் கணவருக்கு செல்போனில் அழைத்தும், மெசேஜ் அனுப்பியும் கணவர் பேசவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அன்சியா தனது தாய் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி