இதில் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு - II காவல் துணை கண்காணிப்பாளர் சிவராஜ் பிள்ளை மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையில் சார்பு ஆய்வாளர் காமராஜ், தலைமை காவலர் கோதண்டராமன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணிபுரிந்து வந்த மேற்படி பிரேம்குமார் மற்றும் ஒருவரும் பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் பிரேம்குமாரை நேற்று சென்னை, திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வைத்து கைது செய்து நிலையம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு - II போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?