தூத்துக்குடி: அழுகிய நிலையில் சடலமாக கிடந்த வாலிபர்

கழுகுமலை அருகே காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை - கயத்தாறு சாலையில் பாண்டி கோவில் அருகே மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். 

இதில் அவர், கழுகுமலை அருகே உள்ள நாயக்கர்பட்டி மாடசாமி மகன் காளிதாஸ் (33) என்பது தெரிய வந்தது. திருமணமாகாத இவர், டவர் லைன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததுள்ளார். இறந்து சுமார் 4 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தொடர்புடைய செய்தி