தென்காசி: பெண் மா்மமாக உயிரிழப்பு; கணவா் சரண்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செவல்விளை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (35). தொழிலாளி. அவரது மனைவி செல்வி (30), கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக உறவினர்கள் கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தென்காசி நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தார். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறும்போது, 'ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருந்த நிலையில், முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி