கடையநல்லூரில் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி ஆய்வு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 18 வாக்குச்சாவடிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி முகாமில், 2002 ஆம் ஆண்டு வாக்களித்தவர்களின் பட்டியல் இணையதளத்தில் இல்லாததால் படிவம் நிரப்புவதில் குழப்பம் ஏற்பட்டதாக தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளர் மா. செல்லத்துரை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோரிடம் புகார் அளித்தார். அப்பட்டியலை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த முகாமில் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி