இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின்கீழ் நடைபெற்ற பயிற்சியில் கிள்ளிகுளம் வே.உ.சி. வேளாண்மைக் கல்லூரி-ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ந. அனுலெட்சுமி, சி. தேவிஷாலினி, மே. தீனக்ஷா, ந. நிவேதா, வெ. புஷ்பவேணி, உ. ஸாபிரா பேகம், த. வான்மதி, க. வினோதா, ரா. வினிபிரட் ஆகியோர் பங்கேற்றனர்.
சரவணபிரியா, லாவண்யா ஆகியோர் சிறப்புப் பயிற்சியளித்தனர். சாண எரிவாயு ஆலை அமைத்தல், அதன் பயன்கள் உள்ளிட்டவை குறித்தும், கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது, கழிவுநீர் எரிவாயு உற்பத்தி கலன், சூரியசக்தி மின்வேலியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு முறை உள்ளிட்டவை குறித்து சிவசந்திரன் விளக்கமளித்தார்.