கடையநல்லூர் அருகே குடோனில் பதுக்கிய புகையிலை பறிமுதல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சக்திவேல் (50) என்பவர், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது உறவினர் வைரமுத்துவை (41) தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி