இது பற்றி புகாரின் பேரில் தென்காசி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் முகம்மது முசப், அதிகாரிகள் பால் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பெயர் குறிப்பிடாத, அதில் என்னென்ன அடங்கியிருக்கின்றன என்பதையும் குறிப்பிடாத ரசாயன பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. அவை பாலை 'திக்'காக வைத்திருப்பதற்கும் நீண்ட நாள் கெடாமல் இருக்கவும் செய்கின்றன. அவருக்கு அந்த ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை சப்ளை செய்த மேலப்பாவூரை சேர்ந்த முப்பிடாதி 45, என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். ரசாயன பவுடர், பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் மூவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
குருவாயூரில் ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்