தென்காசி திருவள்ளுவர் கழக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குநெறிக்குரிசில் சி. இராஜேந்திரன் தலைமை வகித்து ஒருங்கிணைத்தார். பன்முக வள்ளுவர் என்ற தலைப்பில் உளவியல் வித்தகர் என்ற பொருளில் கரூர் கண் மருத்துவர் ரமேஷ், சொல்வேந்தர் என்ற பொருளில் செல்வராஜ், சமூகப் பொதுவுடைமையாளர் என்ற பொருளில் பொறியாளர் கதிரவன், சமூகப்புரட்சியாளர் என்ற பொருளில் பொறியாளர் ஸ்டாலின் ராமகிருஷ்ணன், ஐயுணர்வும் மெய்யுணர்வும் என்ற பொருளில் திருச்சூர் மருத்துவர் என். வி. கே. அஷ்ரப், திருவள்ளுவர் அருளும் மெய்ஞானம் என்ற பொருளில் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர்.
திருவள்ளுவர் கழகத் தலைவர் ந. கனகசபாபதி, செயலர் இராம. தீத்தாரப்பன், பேராசிரியர் ராமச்சந்திரன், தெ. ஞானசுந்தரம் நரேந்திரகுமார், லெட்சுமணன், சாகுல்ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர். குற்றாலம் ஆ. சதாசிவம் வரவேற்றார். திருவள்ளுவர் கழக துணைச் செயலர் இரா. கிருஷ்ணன் நன்றி கூறினார்.