தென்காசி, பூமாரி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் மாரியப்பன் (58) மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் வெள்ளிக்கிழமை திருமணத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில், ஹிஜாப் அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மாரியம்மாளை தாக்கி, பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில், கொள்ளை நடந்த வீட்டின் முன் நேற்று அதிகாலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதில் கொள்ளை போன நகை மற்றும் பணம் இருந்தது.