இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலை குமாரசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
செங்கோட்டை உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.