கடையம் அருகே தளவாய் (50) என்பவர் மாடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பும்போது, அய்யம்பிள்ளைக்குளத்தில் ஒரு மாட்டை வெளியே விரட்டச் சென்றார். எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். புதன்கிழமை காலையில் தேடும் பணியில் ஈடுபட்ட போது, தளவாயின் சடலம் மீட்கப்பட்டது. கடையம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.