கடையநல்லூரில் தந்தையை துடிதுடிக்க அடித்துக் கொன்ற மகன்

முத்துகிருஷ்ணாபுரம் ரெயில்வே பீடர் சாலை பகுதியைச் சேர்ந்த சுப்பையா (70) என்பவருக்கும், அவரது மகன் சேகர் (35) என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து சுப்பையா போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை இது குறித்து கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் கட்டையால் தாக்கியதில் சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி