தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் உள்ள மரகதம் குழுவுக்கு ரூ. 15 லட்சம், கைராசி, பொன்மகள் ஆகிய குழுக்களுக்கு தலா ரூ. 12 லட்சம் என மொத்தம் ரூ. 39 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், வங்கி மேலாளர்கள் பாலாஜி, மலர்விழி, நகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் மனோகரன், வீரபுத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.