மகளிர் திட்ட இயக்குநர் மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் ஆலிம் கிராஅத் ஓதினார்.
மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க செயலர் ரவணசமுத்திரம் மொன்னா முகம்மது ஸலீம், இசையமைப்பாளர் ரமணி பரத்வாஜ், பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன், தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயப் பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன், பொட்டல்புதூர் அமீர்கான் ஆகியோர் ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்துப் பேசினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வி. டி. எஸ். ஆர். முகம்மது இஸ்மாயில், தென்காசி ஹாஜி முஸ்தபா குரூப்ஸ் எஸ். எம். செய்யது சுலைமான், நகர்மன்றத் தலைவர் ஆர். சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம். ஷேக்அப்துல்லா, மாநில விவசாய அணி செயலர் எம். முகம்மது அலி, டாக்டர்கள் வேதமூர்த்தி, தங்கப்பாண்டியன், சோமசுந்தரம், பாலசிங், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஷேக் சலீம், பிராமண நலச் சங்கத் தலைவர் நீலகண்டன், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.